‘என் வாழ்க்கையே போயிடுச்சே’… தகாத உறவால் குடும்பத்தை கைவிட்ட கணவன்… கைக்குழந்தையோடு தலையில் அடித்தபடி கதறி அழுத பெண்..!!

Author: Babu Lakshmanan
6 July 2022, 1:12 pm

கரூர் : குடும்பத்தை சரிவர கவனிக்காமல் வேறு பெண்ணுடன் சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் தரையில் அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு பெண் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி, அருணாச்சல நகரை சேர்ந்தவர் நாகராணி (33). இவரது கணவர் மோகன்ராஜ். இருவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 15 வயதில் இரட்டை சகோதரர்களான மகன்கள், 10 வயதில் ஒரு மகன், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

தாய் தந்தையை இழந்த நாகராணி பாட்டி வளர்ப்பில் வளர்ந்துள்ளார். திருமணத்தின்போது வரதட்சணையாக 16 பவுன் தங்க நகையும், ஒரு லட்சம் ரொக்கமும் சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரோடு மாவட்டம், குறுக்கு சாலையில் வசித்து வரும் மோகன்ராஜ், கரூர் மாவட்டம், வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணுடன் தகாத உறவு வைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடமாக தகாத உறவு வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளை சரி வர கவனிக்காமல் கைவிட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக, இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நாகராணி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அங்கிருந்து நாகராணி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த புகார் தொடர்பாக நேற்று காலை மகளிர் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் போலீசார் தரப்பில் எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை என்று கூறி, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் தரையில் அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!