லேப்டாப் முழுவதும் ஆபாச படங்கள்.. 30 பெண்களுடன் கணவர் உல்லாசம்.. பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2025, 1:05 pm

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஜோதிஸ்வரி (வயது 30), சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர்.

எம்பிபிஎஸ் மற்றும் எம்எஸ் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற இவர், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்த யோதிஸ்வரன் (வயது 34) என்பவரை பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.

யோதிஸ்வரன், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்தைத் தொடர்ந்து, இந்த தம்பதி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசித்து வந்தனர். அங்கு ஜோதிஸ்வரி ஒரு மருத்துவமனையில் பணியாற்றினார்.

ஆனால், மூன்று மாதங்களில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து, ஜோதிஸ்வரி சென்னை கோடம்பாக்கத்தில் தனது தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

யோதிஸ்வரன் அவ்வப்போது சென்னைக்கு வந்து மனைவியை சந்தித்து சென்றார். சுதந்திர தின விடுமுறையையொட்டி, ஜோதிஸ்வரி பெருங்களத்தூர் ஸ்ரீராம் கேஸ்டில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார்.

Husband having fun with 30 women... Scene seen on laptop: Female doctor shocked!

மாலையில் வீடு திரும்புவதாக கூறி புறப்பட்ட அவர், அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், ஜோதிஸ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.

திருமணமாகி 10 மாதங்களே ஆனதால், தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.விசாரணையில், ஜோதிஸ்வரி தற்கொலைக்கு முன் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது.

அதில், அவரது தந்தை சிதம்பரம் பகுதியில் மளிகை கடை நடத்தி, மூன்று மகள்களையும் படிக்க வைத்தது, ஜோதிஸ்வரி தங்கப்பதக்கம் பெற்று சிறந்து விளங்கியது உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

மேலும், கணவர் யோதிஸ்வரன், கஞ்சா உள்ளிட்ட தீய பழக்கங்களில் ஈடுபட்டதுடன், டேட்டிங் செயலி மூலம் 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், இதனால் மனவேதனை அடைந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கணவரின் லேப்டாப்பை பரிசோதித்தபோது பெண்களுடன் ஆபாசமாக கணவர் இருந்த வீடியோவை பார்த்து உண்மைகள் தெரியவந்ததாகவும், இதனால் மனமுடைந்து இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியிருந்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!