தாய் வீட்டிற்கு சென்று திரும்பியதும் கண்மூடித்தனமாக திட்டிய மனைவி : மாயமான காதல் கணவன்!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2024, 11:38 am

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேஷ். இவரது மனைவி திருத்தணியைச் சேர்ந்த அனுசியா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் சென்னையில் பணியாற்றி வந்த போது பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள், இரு குடும்பத்தாரிடம் பேசி பின்னர் இருவீட்டர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவை, சின்னவேடம்பட்டி சக்தி நகர் பகுதியில் குடியேறி அவர்கள் சக்தி சாலையில் உள்ள சங்கரா மருத்துவமனையில் மகேஷ் பணியாற்றி வந்து உள்ளார்.

இதையும் படியுங்க: உறங்கி கொண்டிருந்த நண்பன் தலையில் ஒரே போடு.. சக நண்பர்களை ஷாக் ஆக வைத்த குற்றவாளி!

இந்நிலையில் அனுசியா திருத்தணியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று உள்ளார். மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்த அவர் வீட்டைத் திறந்து பார்த்து உள்ளார்.

அப்பொழுது வீடு சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் உணவுப் பொருட்களை அதிக அளவில் வீணடித்து கிடந்தது கண்டு ஆத்திரம் அடைந்த அனுசியா, மகேசை திட்டி உள்ளார்.

News tamil

இதில் கோபமடைந்தவர் கடந்த மாதம் 17ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை.

இதனால் தனது கணவனை காணவில்லை கண்டுபிடித்து கொடுக்குமாறு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுத்தமாக வீட்டை வைத்துக் கொள்ளவில்லை என மனைவி திட்டியதால் கோபித்துக் கொண்டு காதல் கணவன் காணாமல் போனது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!