மனைவியை கண்டுபிடித்து தரக் கோரி கணவன் தீக்குளிப்பு : காவல்நிலையத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2021, 10:15 pm
Police station Fired-Updatenews360
Quick Share

திருச்சி : காவல் நிலையம் முன்பு மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் தீக்குளித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 44) போர் போடும் வண்டியில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சோலை ஈஸ்வரி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பாக இவரது மனைவி இரண்டு குழந்தைகளுடன் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இது குறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த ஞானப்பிரகாசம் காலை உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு முன்பாக பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவரை காப்பாற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மனைவியை காணவில்லை என புகார் அளித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் நடவடிக்கை இல்லாததால் கணவர் விரக்தியில் தீக்குளித்த சம்பவம் உப்பிலியபுரம் காவல் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 73

0

0