“நா பண்ணுனது தப்புதான், வீட்டிற்கு வா“ : மனைவியிடம் கெஞ்சிய கணவன் விபரீத முடிவு!!

30 September 2020, 3:16 pm
Kanchi Husband Suicide - updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). இவர் ஒரகடத்தில் உள்ள நிஸான் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுதாகருக்கும் ராஜலட்சுமிக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் கணவனிடம் கோபித்துக்கொண்டு இரண்டு பெண் குழந்தைகளுடன் எண்ணூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார் ராஜலட்சுமி.

இதனைத்தொடர்ந்து சுதாகர் பலமுறை ராஜலட்சுமியிடம் தொலைபேசி வாயிலாக வீட்டிற்கு வரச்சொல்லி வலியுறுத்தியும் ராஜலட்சுமி வீடு திரும்பாத காரணத்தால் மனமுடைந்த சுதாகர் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் உயிரிழந்த சுதாகரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0 View

0

0