குடிசை வீடு சுவர் இடிந்து விழுந்து விபத்து:உறங்கிக் கொண்டிருந்த வயதான தம்பதி பலி
Author: kavin kumar21 November 2021, 3:09 pm
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே குடிசை வீடு இடிந்து சுவர் இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஜெமின் எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேதாசலம் (80). இவர் மனைவி செந்தாமரை (72). இவர்கள் இருவரும் இரவு வீட்டில் படுத்துக் கொண்டிருக்கும் போது கடந்த வாரமாக பெய்த மழையின் காரணமாகவும், நேற்று இரவு இடியுடன் பெய்த கனமழை காரணமாக வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.இன்று காலை வழக்கம் போல் அருகில் உள்ள மகனுடைய மகள், பேத்தி, தாத்தா, பாட்டிக்கு காபி கொண்டுவந்து பார்க்கும்போது, சுவர் இடிந்து விழுந்து தாத்தா பாட்டி இருவரும் பலியாகி உள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சித்தாமூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0