ஜெயலலிதாவின் தம்பி என்று அழைக்கும் அளவுக்கு அரசியல் செய்தவன் நான்.. திருமாவளவன் வைத்த டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan9 July 2025, 4:43 pm
விசிக எம்பியும், அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியோது என்னை வாழ்த்தியவர் ஜெயலிலதா.
இதையும் படியுங்க: எதுக்கு இந்த பொய், பித்தலாட்டம்? பழி போடுவதை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் : காங்., தலைவர் காட்டம்!
அதிமுக கூட்டணியில் இருந்த போது ஜெயலலிதாவின் தம்பி என கூறும் அளவுக்கு அரசியல் செய்தவன் நான். இது அதிமுகவினருக்கு நன்றாக தெரியும், ஆனால் இபிஎஸ்க்கு எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை
திராவிட இயக்கும் என நம்பிக் கொண்டிருக்கக்கூடிய அதிமுக, பாஜக கட்சியால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தோழமையுடன் நான் சுட்டி காட்டுகிறேன், பாஜகவால் அதிமுகவிற்கு ஏற்படப்போகும் பாதிப்பை இபிஎஸ் அறியாமல் உள்ளார்.

தோழமை கட்சி என அதிமுகவை கருதுவதால் தான் கூட்டணி குறித்து விமர்சனம் செய்கிறேன், அவர்கள் எடுத்த கூட்டணி முடிவு அவர்களுக்கே சந்தேகமாக உள்ளது.

சாதி ஒழிய வேண்டும் என்பது நோக்கம் ஆனால் அதற்கு முழுமையாக சாத்தியம் இல்லை. அறநிலையத்துறை கல்லூரிகள் கட்டுவது நல்ல பணிதான் என அவர் கூறினார்.