கீழ்த்தரமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.. என்னோட ஸ்டேட்ஸே வேறு : அமைச்சர் துரைமுருகன் அதிரடி!
Author: Udayachandran RadhaKrishnan26 July 2025, 12:52 pm
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கோடியே 43 லட்சம் மதிப்பில் 6 புதிய குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்வது குறித்து கேட்டதற்கு, அதை எதிர்த்து தான் தமிழ்நாடு முதலமைச்சர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதிலே மிகப்பெரிய ஒரு எழுச்சி, புரட்சி இதனால் உருவாகும் என கூறினார்.

அமித்ஷாவை நான் சந்தித்தால் தவறு, முதல்வரும் அவருடைய மகனும் சந்தித்தால் சரியா? என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி இருந்தது குறித்து கேட்டதற்கு, வ்வளவு கீழ்த்தரமான கேள்விகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. அவர்கள் ஸ்டேட்டஸ் வேறு என்னுடைய ஸ்டேட்டஸ் வேறு என கூறினார்.
மேலும் திமுக ஆட்சியின் குறைகள் குறித்து பொதுமக்களிடம் அதிமுக துண்டு பிரசுரம் விநியோகிப்பதாக கேட்ட கேள்விக்கு, “கொடுக்கட்டும்” என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
