திருமாவளவன் தமிழரா என்பதில் எனக்கு சந்தேகம்… விஜய்க்கு குறுகிய மனப்பான்மை : ஜான் பாண்டியன் கருத்து!
Author: Udayachandran RadhaKrishnan25 August 2025, 3:33 pm
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தமமுக மாநில மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி என்.டி.ஏ கூட்டணியின் தலைவராக இருக்கிறார். அவர்கள் சார்பில் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன் மற்றும் விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறேன். அவர்கள் நல்லது செய்வார்கள் என நினைக்கின்றேன். தமமுகவுடன் பயணிக்கும் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான்.
த.வெ.க பேனரில் அண்ணா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்களை பேனரில் போடப்பட்டது குறித்த கேள்விக்கு, அம்பேத்கர், மற்ற தலைவர்களை பேனரில் போடுவது பொது தலைவர்கள் தான்.
அரசியல் கட்சிகள் அரசியல் வாதிகளையும் பேனரில் போடுவதும் நியாயம்தான்.
த.வெ.க கட்சி ஆரம்பித்து 2 மாநாடுகள் நடத்தியுள்ளார். ஆனால், மக்களை சந்திக்கவில்லை. சந்தித்த பின்பே முடிவு சொல்ல முடியும். மாநாட்டை வைத்து எதுவும் சொல்ல முடியாது.
பிரதமர் மோடியை விஜய் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, அரசியல் அநாகரிகம் இல்லை என்பதை காட்டுகிறது. ஒருவரை விமர்சனம் செய்வதால் நாம் வளர்வோம் என்பது குறுகிய மனப் பணியுடன் செயல்படுவதாக நான் கருதுகிறேன்.
விஜய் யாரோ எழுதிக் கொடுத்ததை படித்துவிட்டு சென்றுவிட்டார். தமிழ்நாட்டில் தனித்து நின்று முதலமைச்சர் ஆகிவிடுவேன் என்பது நடக்காத ஒன்று. கனவுதான்.
புதிதாக விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் அவரை வாழ்த்துவோம். மக்கள் ஏற்றுக் கொண்டால் நாமளும் ஏற்றுக் கொள்வோம்.

விஜய் மாநாட்டில் ரசிகர்கள் கூட்டமே அதிகமாக இருந்தது. அரசியலாக வருமா என்பது கேள்விக்குறி பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைத்து இருக்கிறது. பாலியல் தொல்லைகள் அதிகமாக உள்ளது ஆணவ படுகொலைகள் 24 முதல் 25 நடந்துள்ளது. மாணவர்கள் இடையே மது, கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது.
காவல்துறையில் ஒரு சில அதிகாரிகள் தன்னிச்சையாக சாதி ரீதியாக செயல்படுவது பொய்த்து போய் இருக்கிறது என்று தான் நான் சொல்லுவேன்.
திருமாவளவன் தமிழரா என்பதில் எனக்கு சந்தேகமாக உள்ளது. தமிழருக்கு துணை ஜனாதிபதி பதவி கொடுக்கலாம் என்றால் அதனை வாழ்த்தணுமே தவிர அரசியலுக்காக வேஷம் போடக்கூடாது.
சிபி ராதாகிருஷ்ணன் நல்ல மனிதர். அவர் துணை ஜனாதிபதி ஆவதை விமர்சனம் செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

கவின் கொலை வழக்கு சாதிய கொலை வழக்கு இல்லை. ஆணவ கொலை. இரண்டையும் முடித்து போடக்கூடாது. சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதலமைச்சர் ஏன் அனுமதி கொடுத்தார் பின் ஏன் அனுமதி மறுத்தார் என்று எனக்கு தெரியவில்லை அவரிடம் தான் கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.
