தமிழக மக்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன் : மதுரையில் இருந்து புறப்பட்ட ராகுல் காந்தி நெகிழ்ச்சி!!

14 January 2021, 2:39 pm
Rahul Gandhi- Updatenews360
Quick Share

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டிடை நேரில் பார்க்க தனி விமானம் மூலம் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து மதுரை வந்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வரவேற்றனர்.

பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசித்த அவர், தமிழ் கலாச்சாரம், பாராம்பரியத்தை காப்பது என் கடமை என பேசினார். முன்னதாக தமிழக மக்களுக்கு வணக்கம் என கூறிய அவர், ஜல்லிக்கட்டில் பார்வையாளராக பங்கேற்றது மகிழ்ச்சி என்றும், தமிழர்களின் உணர்ச்சிகளை, கலாச்சாரத்தை ரசித்து பாராட் வந்ததாக கூறினார்.

image

இதனிடையே திமுக இளைஞரணி செயலார் உதயநிதியுடன் இருவரும் அருகருகே அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்தனர்.

இதன் பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள், ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.

தமிழக மக்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன், அவர்களுக்கு என் நன்றி என கூறிய அவர், ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்கு துன்புறுத்தல் கூடாது என்று என்னிடம் கூறினார்கள், ஆனால் இங்கு வந்த போட்டியை பார்த்த போது , காளைகளை துன்புறுத்தவில்லை என்பதை உணர்ந்தேன் என்றார்.

மேலும் பேசிய அவர் கலாச்சாரங்கள் நசுக்கப்படுகிறது, தமிழ் மொழி நசுக்கப்படுகின்றன என குற்றம்சாட்டினார். அதை காப்பாற்ற வேண்டியது என் கடமை என்றார். விவசாய போராட்டங்களை நசுக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

Views: - 16

0

0