ஆண்டுக்கு 30 மாணவ, மாணவிகளின் உயர் கல்வி செலவினை ஏற்பேன் : அதிமுக வேட்பாளர் வாக்குறுதி…

Author: kavin kumar
17 February 2022, 5:35 pm

திருச்சி : லால்குடி நகராட்சி 8வது வார்டில் நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முகமது பெரோஸ் தான் வெற்றி பெற்றால் சாதி, மத பாகுபாடின்றி ஆண்டுக்கு 30 மாணவ, மாணவிகளின் உயர்கல்விச் செலவினை ஏற்க உள்ளேன் என அதிமுக வேட்பாளர் வாக்குறுதி் அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..

திருச்சி மாவட்டம் லால்குடி பேருராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதன் முறையாக நகராட்சி தேர்தலை சந்திக்கிறது. இந்த நகராட்சியில் 8வது வார்டில் நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முகமது பெரோஸ் தான் வெற்றி பெற்றால் சாதி, மத பாகுபாடின்றி ஆண்டுக்கு 30 மாணவ, மாணவிகளின் உயர்கல்விச் செலவினை ஏற்க உள்ளேன் என அதிமுக வேட்பாளர் வாக்குறுதி் அளித்து தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார்.

அப்போது அவர் படித்து வேலை இல்லாதவர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வசதி ஏற்படுத்தி தரப்படும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் உதவி திட்டம் இல்லாத நபர்களுக்கு பதிவு செய்து வசதிகள் பெற்று தரப்படும், குற்ற நடவடிக்கைகளை தடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வார்டு முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் உள்ளிட்ட 18 வகையான தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை 8 வது வார்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் வீடு்வீடாக சென்று வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இது மட்டுமல்லாது தூய்மை பணியாளர்கள்,பூ வியாபாரிகள், மற்றும் குடிசைப் பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் செய்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற வைக்குமாறு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!