30 தொகுதியில் வெற்றி பெறாவிடில் மேடையிலேயே தற்கொலை செய்வேன் : வாய்ச்சவடால் விட்ட திமுக பிரமுகர்!!

18 January 2021, 5:02 pm
Jagathratchagan - Updatenews360
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்வேன் என திமுக மேலிடப் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகனின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே இணக்கமற்ற சூழல் நிலவுகிறது. இதனால் இந்த கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் எழுந்ததுள்ளது.

இந்த நிலையில் திமுக தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம் என்று முழக்கத்தோடு செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் புதுச்சேரி திமுக மேலிடப் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பின்னர் பேசிய ஜெகத்ரட்சகன், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும், திமுக வெற்றி பெறாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்வேன் என ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0