அமித்ஷா – இபிஎஸ் கூறிய கருத்துக்கு நான் பதில் சொன்னால் அது நாகரிமாக இருக்காது : டிடிவி தினகரன்!
Author: Udayachandran RadhaKrishnan14 July 2025, 1:03 pm
விழுப்புரத்தில் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம்., அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற கருத்து குறித்த கேள்வி எழுப்பினர்.
இதையும் படியுங்க: சரோஜா தேவியின் ஒரே ஒரு படத்தை திரும்ப திரும்ப பார்த்த ஜெயலலிதா.. எந்த படம் தெரியுமா?
இதற்கு பதில் அளித்த டி.டி.வி தினகரன், திமுகவை வீழ்ந்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தின் காரணமாக, தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை நிறைவேற்றும் விதமாக தேசிய ஜனநாயக கூட்டணியை அமித்ஷா வலுப்படுத்தி வருகின்றார். இந்த முயற்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக கருத்து சொல்வது நாகரிகமாக இருக்காது. மேலும் கூட்டணியில் உள்ள தலைவர்கள் அவர்களின் விருப்பத்தை சொல்கிறார்கள் என்றார்
திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் மாநிலத் தலைவர் சண்முகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தான் மக்களை தைரியமாக சந்திக்க முடியும் என கூறுகிறார். எனவே திமுக கூட்டணி, எங்கள் கூட்டணி பார்த்து பயப்படுகிறது.

எங்கள் கூட்டணி உறுதியாக திமுகவை வீழ்த்தி இந்த மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி, தமிழ்நாட்டில் மக்களாட்சியை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி போன்ற ஒரு நல்லாட்சியை, சட்டம் ஒழுங்கு சரியான பராமரிக்கும் ஆட்சியை, கொலை கொள்ளை இல்லாத ஆட்சியை, கூலிப்படைகள் இல்லாத ஆட்சியை, காவல்துறை மக்களின் நண்பர்களாக செயல்படுகிற ஆட்சியை உறுதியாக உருவாக்குவோம்.
