நல்ல மனநிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே பதில் கொடுப்பேன்… யாரை தாக்கி பேசினார் சீமான்?!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2025, 4:36 pm

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனையும் உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை செய்தார்.

இதையும் படியுங்க: “பெரியார் அப்படி பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது”.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

தொடர்ந்து மீண்டும் செய்தியாளர்களை சிந்தித்த அவர்..தன் மீது எத்தனை வழக்கு போட்டாலும் அதை பார்த்து நான் பயப்பட போவதில்லை வேண்டுமென்றால் 100, 50 வழக்குகள் கூட போட்டுக் கொள்ளலாம் தேசிய பாதுகாப்பு சட்டத்தையே பார்த்து பயப்படாத பயப்படாதவன் நான் என்று தெரிவித்தார்.

Seeman TAlk About Veeralakshmi

தமிழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி சீமான் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார் இது குறித்து சீமானிடம் கேட்டபோது, சரியான மனநிலையில் உள்ளவர்கள் பேசினால் நான் பதிலளிப்பேன் என்று அவர் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!