நானே பரிமாறுறேன்.. தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு விருந்து உபசரித்து நன்றி சொன்ன கனிமொழி எம்.பி..!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2024, 2:43 pm

தூத்துக்குடி VVSP மஹாலில், மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றதற்குச் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி சைவ மற்றும் அசைவ விருந்து வழங்கினார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகக் கனிமொழி எம்.பி விருந்து வழங்கினார். மேலும், நிர்வாகிகளுக்கு இனிப்பு பரிமாறி, நலம் விசாரித்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

  • A famous actress living alone with a director? The secret has been revealed! இயக்குநருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை? வெளியான ரகசியம்!