அண்ணாமலை, சீமான் ஓட்டு கேட்டு வந்தால் செ**பை கொண்டு அடிங்க.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2025, 11:23 am

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழன் பிரசன்னா சிறப்பு பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் மாவட்ட கழகப் பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
அதிமுக மூன்றாக உடைந்த போதும் எடப்பாடி ஓபிஎஸ் தினகரன் மூன்று தரப்பும் ஒன்றறை கோடி உறுப்பினர்கள் உள்ளதாக பொய்யாக தெரிவித்து வருகின்றனர்.

பாமக அன்புமணி ராமதாஸ் பிரச்சனை குறித்தும் கடுமையாக பொதுக் கூட்டத்தில் அநாகரீகமாக பேசி விமர்சனம் செய்தார்.

இதையும் படியுங்க: இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

தேர்தலில் வாக்கு கேட்டு வரும் அண்ணாமலை சீமான் எடப்பாடி பழனிசாமியை பெண்கள் துடைப்பம் செருப்பு கொண்டு அடிக்க வேண்டும் என்றும் சக்கர நாற்காலியில் கலைஞர் தள்ளாடினாலும் தமிழகத்தை தள்ளாடாமல் பார்த்துக் கொண்டார் என திமுக சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
தெரிவித்தார்.

இவர் பொதுக்கூட்டங்களில் அநாகரிகமாக பேசுகிறார் என பல முறை திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பொதுக்கூட்டங்களில் பேச தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து தற்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பொதுக்கூட்டங்களில் பேசிவருவது குறிப்பிடதக்கது.

If Annamalai comes asking for votes hit it with a shoe.. DMK spokesperson controversy

பேச்சாளர் தமிழன் பிரசன்னா பொதுக் கூட்டத்தில் பேசுகையில், மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் அனைவருக்கும் 90 நாட்களில் விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என்றும் முதல்வர் விடியல் பயணத்திற்காக 2000 கோடி பணம் கட்டுகிறான் என முதல்வரை திமுக பொதுக்கூட்டத்திலேயே ஒருமையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!