பஞ்சப்பூரில் எனக்கு சொத்து இருந்தால் கையெழுத்து போட்டு தரேன்.. இபிஎஸ் எடுத்துக்கொள்ளட்டும் : அமைச்சர் சவால்!
Author: Udayachandran RadhaKrishnan26 August 2025, 12:30 pm
தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியின் தலைவர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி மேயர் அன்பழகன் உட்பட துறைஅதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் முதல்வர் குடும்பத்துடன் சண்டை போடவில்லை இணக்கமாக உள்ளேன்.
அதிமுக கூட்டத்திற்கு வந்தவர் தான் உடம்பு சரியில்லை என ஆம்புலன்ஸ் அழைத்தார்கள் அவரை போட்டு அடிக்கிறார்கள் இதில் என்ன நியாயம் இருக்கிறது .

பத்திரிக்கையாளர் நீங்கள் தான் சொல்ல வேண்டும் போலீஸ் ரிப்போர்ட் எனக்கு கொடுத்தது அவர்கள் போன் பண்ணி அவர்களே ஆம்புலன்ஸ் அளித்ததாக குறிப்பிட்டார்கள்.
ஆம்புலன்ஸை தாக்குவது ரொம்ப தப்பு முதல்வர் பேசும் பொழுது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆம்புலன்ஸ் வந்தால் பேச்சை நிறுத்தி உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி அனுப்பிவிடுவார்.
ஆனால் அதிமுக பிரச்சனை செய்கிறார்கள் அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். எல்லா செய்திகளும் யார் எப்படி நடந்து கொண்டிருந்தாலும் மக்கள் கூர்ந்து நோக்கி கொண்டிருக்கிறார்கள். மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.

திமுக ஆம்புலன்ஸ் விடுவதாக குற்றச்சாட்டு குறித்து பேசிய போது நாங்கள் ஏன் ஆம்புலன்ஸ் செய்ய வேண்டும் அவர்கள் வைக்கும் பிளக்ஸ் பேனர்கள் நடுரோட்டில் வைத்தாலும் எதிர்க்கும் நாங்கள் தடை ஏற்படுத்தவில்லை. கூட்டத்திற்கும் இந்த தடையும் நாங்கள் செய்யவில்லை.
பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே உங்களுக்கு 300 ஏக்கர் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி நேற்று மேற்கு தொகுதி புத்தூர் 4 ரோடு பகுதியில் பேசியுள்ளார் குறித்த கேள்விக்கு எங்களுக்கு சொந்தமான நிலம் இருந்தால் அரசோ, பொதுமக்கள் எடுத்துக் கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் எடுத்துக் கொள்ளலாம்.
நகராட்சி எடுத்துக் கொள்ளலாம். அங்கு எங்கு 300 ஏக்கர் உள்ளது. எனக்கு எந்த நிலம் இருந்தாலும் அதனை அரசுக்கு சொந்தமாக எடுத்துக் கொள்ளலாம். எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் கையெழுத்து போட்டு தருகிறேன். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எங்கள் சம்பந்தப்பட்டவர் யாருக்காக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். பழனிச்சாமியே வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளலாம்.
பிஜேபியுடன் கூட்டணி வைத்ததே தங்களை பாதுகாத்துக் கொள்ள தான் கூட்டணி வைத்துள்ளார் என நாங்கள் ஏற்கனவே பேசி வருகிறோம். இப்பொழுதும் சொல்கிறோம். இவை போல எங்களை நினைக்கிறார்.

சென்னையில் ஒரு நாள் மீது மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்பதாக கேட்டதற்கு எங்கே மழை நீர் செய்து உள்ளது ஒரு மணி நேரத்தில் மழை நீர் வடிந்து விடுகிறது. மழைநீர் அதிக அளவு பெய்தாலும் வடிவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை மழை நீர் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் மட்டுமே நின்றது பிறகு வடிந்துவிட்டது.
உங்களுடைய பதவியை காப்பாற்றுவதற்காக தான் முதல்வர் குடும்பத்துடன் இணக்கமாக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார் என்ற கேள்விக்கு நான் என்னைக்கு முதல்வர் குடும்பத்துடன் சண்டை போட்டேன்.
எங்களுக்கு தலைவர் அவர்கள் சொல்லும் படி தான் நடக்க வேண்டும் இணக்கமாக இல்லாதவர் தங்கமணியை ஒதுக்கி வைத்துள்ளார். கட்சியில் உள்ளவர்கள் எடப்பாடி பழனிச்சாமி பற்றி என்னவெல்லாம் வெளியில் பேசுகிறார்கள் என்பது தெரியும்.
கட்சியினுடைய தலைவர் முதல்வர் சொல்லும் பணியை முதன்மைச் செயலாளராக இருப்பதால் நிறைவேற்ற வேண்டும் வேண்டும் முதலமைச்சர் அமைச்சர், நான் அமைச்சராக இருக்கிற காரணத்தினால் என்ன சொல்கிறார்கிறரோ அதை நிறைவேற்ற வேண்டும்.
சர்டிபிகேட் கொடுத்ததுக்கு ரொம்ப நல்லது தப்பு தண்டா பண்ணாமல் இணக்கமாக இருக்கும் அது காரணம். எடப்பாடி பழனிச்சாமி பெருவாரியா தொகுதிகள் ஜெயிப்போம் என குறிப்பிடுவர் பெருவாரியாக தோற்பார் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
