இளங்கோவன் வீட்டில் நடந்த சோதனையில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

Author: kavin kumar
22 October 2021, 11:59 pm
Quick Share

கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன் வீட்டில் இன்று நடந்த சோதனையில் 21 கிலோ தங்கம், 29 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர். இளங்கோவன், தனது மகனும் சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தின் துணைத்தலைவருமான மகன் பிரவீன்குமார் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்மந்தமாக அவர் மீது சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் நடைபெற்றுவருகிறது.

மேற்படி வழக்கு தொடர்பாக இளங்கோவன் மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுனங்கள், நகைக் கடைகள் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் மற்றும் சுவாமி அய்யப்பன் அறக்கட்டளை என்ற பெயரில் முசிறியில் செயல்பட்டுவரும் முசிறி இன்ஸ்டியூட்ஸ் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்கள் உட்பட 36 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் இன்று சோதனைகள் நடைபெற்றது. இந்த நிலையில், இளங்கோவன் வீட்டில் இருந்து 21.2 கிலோ, தங்கம் 282 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ரூ.29.77 லட்சம் ரொக்கம், 10 சொகுசு கார்கள், 2 வால்வோ சொகுசு பறிமுதல், 3 கணிணி ஹார்டு டிஸ்க், சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Views: - 161

0

0