உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு கொலையாளி ஆக மாறிய கள்ளக்காதலி… கள்ளக்காதலன் குடும்பத்தை பழிதீர்க்க ஸ்கெட்ச்!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2024, 10:58 am

கள்ளக்காதலனை பழி வாங்க அவரது குடும்பத்தை சரமாரியாக வெட்டிய கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் லக்ஷ்மணன் (26). பொன்னேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான லக்ஷ்மணனும், மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான விஷ்ணுவும், புழல் சிறையில் இருந்த போது பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகியுள்ளனர்.

விஷ்ணுவுக்கு லட்சுமணனின் மனைவி ரம்யாவுடன் ஏற்பட்ட தகாத உறவை தட்டி கேட்டதால் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி விஷ்ணு தமது கூட்டாளிகளுடன் சேர்ந்து லக்ஷ்மணனை சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

இந்த வழக்கில் விஷ்ணு, தம்பி விஷால் உட்பட 5 பேரை கைது செய்த மீஞ்சூர் போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தோட்டக்காடு பகுதியை சேர்ந்த விஷ்ணு, விஷால் ஆகியோரின் வீட்டிற்கு சென்ற மர்ம கும்பல் அந்த வீட்டில் இருந்த மூவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றது.

விஷ்ணுவின் தந்தை ரகு (48), தாய் ஜெயபாரதி (42), விஷாலின் மனைவி அர்ச்சனா (21) ஆகிய மூவரும் படுகாயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்ட லஷ்மணன் மனைவி ரம்யா தமது காதல் கணவனை கொலை செய்த கள்ளகாதலன் விஷ்ணுவை பழி தீர்ப்பதற்காக கணவனின் சகோதரர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுடன் ரம்யா சென்றுள்ளார்.

தோட்டக்காடு பகுதியில் உள்ள கள்ளக்காதலன் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற ரம்யா பெண் காவலர் எனவும் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

காவலர் என கூறியதால் வீட்டின் கதவை திறந்துள்ளனர். ரம்யாவுடன் வந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த மூவர் மீது பெட்ரோல் ஊற்றி அவர்களது நகைகளை பறித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து வீட்டில் இருந்த மூவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மீஞ்சூர் போலீசார் ரம்யா (24), மாரன்ராஜ் (29), திருப்பதி (22) ஆகிய மூவரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  • Don't commit Nayanthara to cast in my film... Superstar's sudden order மறுபடியும் என் படத்துல நயன்தாராவ போடாதீங்க… சூப்பர் ஸ்டாரின் திடீர் கட்டளை : என்ன ஆச்சு?