சட்டவிரோத விளம்பர பலகைகள்.. தமிழக அரசுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2023, 7:01 pm

சட்டவிரோத விளம்பர பலகைகள்.. தமிழக அரசுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!!

சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைத்தது தொடர்பாக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு மற்றும், விழுப்புரத்தில் தி.மு.க. நிர்வாகியின் வீட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று கொடிக் கம்பம் நாட்டிய போது 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வழக்கு ஆகியவை இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு

இதனை தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விபத்து நடந்த பிறகு விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட, சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பதை தடுப்பது முக்கியமானது என்று தெரிவித்தனர். மேலும் சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பது தொடர்பாக மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் இதுவரை எடுத்த
நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!