ஏரிக் கரையில் உல்லாசம் : பிரியாணியுடன் கிடந்த பிணத்தால் சிக்கிய பெண்!!

2 November 2020, 6:00 pm
Biriyani Murder- Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : தியாகதுருகம் அருகே ஸ்வீட் கடையில் பணியாற்றியவர் கொலையான சம்பவத்தில் பல ஆண்களுடன் சுற்றிய பெண் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருண்ஷகிரியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 30) என்பவர் கள்ளக்குறிச்சி அருகே மாந்தூர் பகுதியில் உள்ள ஸ்வீட் ஸ்டாலில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 28ம் தேதி தியாகதுருவம் அருகே ஏரி பகுதியில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.

பழனிசாமி கழுத்தை நெறித்து கொலை செய்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டதால், பழனிசாமி பணிபுரிந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிசிடிவி காட்சியில் பழனிசாமி, பெண் ஒருவருடன் பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி விட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண் யார் என விசாரணை நடத்தினர். அந்த பெண் உளுந்தூர் பேட்டையில் உள்ள இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்த கோமதி என்பதும், அவர் பல ஆண்களுடன் தொடர்பில் உள்ளர் என்பதும் தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், பழனிசாமிக்கும் தனக்கும் நீண்ட காலமாக பழக்கம் இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருவம் வந்ததாகவும், பழனிசாமி குடிபோதையில் இருந்ததகாவும் கூறினார்.

பின்னர் தியாகதுருவம் அருகே உள்ள பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சென்று பிரிதிவிமங்கலம் ஏரி அருகே சாப்பிட்டு விட்டு உல்லாசமாக இருந்தோம் என வாக்குமூலம் அளித்தார். அப்போது குடிபோதையில் பழனிசாமி எட்டி உதைத்தால் ஆத்திரமடைந்து துணியால் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை எடுத்து தப்பியோடியதாக கூறியுள்ளார்.

பல்வேறு ஆண்களுடன் உல்லாசமாக இருந்து பணம் பறித்த வழக்குகள், இந்த பெண் மீது நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 14

0

0