அம்சாவிடம் உல்லாசம் அனுபவிக்க இம்சையாக இருந்த இருவர் கொலை : முன்னாள் ராணுவ வீரருடன் கள்ளக்காதலி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2021, 7:09 pm
Dharapruam Murder - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே மூலனூர் அருகே கள்ளக்காதல் பிரச்சனையால் இருவர் கொன்று எரித்த சம்பவத்தில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட கள்ளக்காதலியையும் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் வெள்ளகோவில் சாலையில் கவுண்டர் நர்சரி பள்ளி நடத்தி வந்தவர் முன்னாள் ராணுவ வீரர் முத்துசாமி (வயது 70). இவருக்கு மனைவி ஒரு மகன் உள்ளார்.

இவரது போக்கு பிடிக்காத காரணத்தினால் கருத்து வேற்றுமை காரணமாக இவரது மனைவி சுமார் இருபது ஆண்டுகளாக இவருடன் வாழாமல் பிரிந்துவிட்டார். இவரது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

மூலனூர் வெள்ளகோவில் சாலையில் உள்ள அவரது வீட்டில் இவர் மட்டும் தனியே குடித்தனம் நடத்திக் கொண்டு விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மூலனூர் அருகே உள்ள கிலங்குண்டல் ஊராட்சிக்குட்பட்ட சுள்ளிபெரிக்கபாளையத்தில் ஒரு தோட்டம் உள்ளது.

இவர் இந்த இரண்டு தோட்டங்களிலும் விவசாய பணிகளை கவனித்து வந்துள்ளார். இதில் தோட்ட பணிகளை கவனிக்க சொல்லி சுள்ளிபெருக்கபாளையத்தை சேர்ந்த அம்சா என்கின்ற அம்சவேணி மற்றும் அவரது கணவர் ரவி ஆகிய இருவரையும் தோட்டத்து பணிக்காக அமர்த்தியுள்ளார்.

இந்த நிலையில் சுள்ளிபெருக்காபாளையத்தில் உள்ள தோட்டத்தின் அருகே உள்ள வேலுச்சாமி என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துள்ளார். தோட்டத்தின் உரிமையாளர் வேலுச்சாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்த நிலையில் அவரை முத்துசாமியின் தோட்டத்தில் பணிக்காக வேலைக்கு சேர்த்துள்ளார்.

முத்துச்சாமி (ஓய்வு பெற்ற ராணுவ வீரர்)

முத்துசாமி இரவு நேரங்களில் அவரை நம்பி தோட்டத்தை பணிகளை விட்டுச் சென்றுள்ளார். அதை பயன்படுத்திய வேலுச்சாமி, தோட்டத்தில் இருந்த ஆடுகள் மற்றும் தோட்டத்தில் இருந்த பணம் மற்றும் தோட்டத்தின் பொருள்களை முத்துசாமிக்கு தெரியாமல் திருடி உள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த முத்துசாமி, வேலுச்சாமியை தனது தோட்டத்திற்கு வரவழைத்து கல்லால் அடித்து கொலை செய்து வேலுச்சாமியின் தோட்டத்திலேயே எரித்து விடுகிறார். இந்த சம்பவத்திற்கு ரவி என்பவரது மனைவி உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

வேலுச்சாமி

கொலை செய்த விஷயத்தை தனது கணவரிடம் மனைவி அம்சவேணி கூறியுள்ளார். குடிப்பழக்கம் உள்ள ரவி இந்த தகவலை அப்பகுதி பொதுமக்களிடம் கூறியுள்ளார். இனதால் ரவி மீது முத்துசாமிக்கு பகை ஏற்பட்டது.

இந்தநிலையில் ரவியின் உறவினர்கள் ரவியின் மனைவி மற்றும் முத்துசாமி குறித்து அரசல் புரசலாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ரவி மறுநாள் தோட்டத்திற்கு வந்த முத்துசாமியை வழிமறித்து தாக்கியுள்ளார்.

இதையடுத்து ரவியை தோட்டத்திற்கு வரவழைத்து கொலை செய்து தோட்டத்தின் அருகே உள்ள ஓடையில் தீ வைத்து எரித்து கொலை செய்தார். இந்த சம்பவத்திற்கும் ரவியின் மனைவி அம்சவேணியே உடந்தையாக இருந்துள்ளார்.

அம்சவேணி

இந்த சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பிறகு ஊர் மக்களை ஏமாற்ற அம்சவேணி தனது கணவரை காணவில்லை மூலனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அம்சவேணி உடன் கள்ளக்காதல் வாழ்க்கையை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார் ராணுவ வீரர் முத்துசாமி.

ஆனால் வேலுச்சாமியின் உடன் பிறந்த சகோரி, தனது அண்ணனை காணவில்லை என போலீசாரிடம் புகார் தெரிவிக்கவே விசாரணை வளையத்திற்குள் வந்த இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

மூலனூர் உயர் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அம்சவேணியிடம் முத்துசாமி தகாத தொடர்பு வைத்ததையும், கொலை நடந்ததையும் அறிந்தனர். இதையடுத்து கோவையிலிருந்து சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் ஜெய் சிங் மருத்துவர்கள் பேரானந்தம் குழுவினர் வரவழைக்கப்பட்டு பிணங்கள் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து ஆய்வின் முடிவிற்காக கோவை மருத்துவ கல்லூரி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் .

இதுதொடர்பாக குற்றவாளியான முத்துச்சாமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அம்சா என்ற அம்சவேணி யையும் மூலனூர் காவல்துறையினர் கைது செய்து ஆஜர்படுத்தி சிறையிலலடைத்தனர். இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 710

0

1