சட்டவிரோத சேவல் சண்டை நடத்திய திமுக நிர்வாகிகள் : சேவல் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..!

Author: Babu Lakshmanan
15 January 2022, 4:39 pm
Quick Share

கரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற சேவல் சண்டை நடத்திய நிலையில், சேவல் மற்றும் 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள பேருந்து டெப்போ அருகே திமுக நிர்வாகிகளான கோல்டு ஸ்பாட் ராஜா, தம்பி சுதாகர் ஆகியோருக்கு சொந்தமான பிளக்ஸ் வேஸ்ட் கழிவுகள் கொட்டுவதற்காக குடோன் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த குடோன் அருகில் இன்று அனுமதியின்றி சேவல்கட்டு நடைபெற்று வந்த நிலையில், இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அங்கு சென்ற போது, அனைவரும் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில், அங்கிருந்த பாலாஜி (26) ராமானுஜம் நகர் பகுதியைச் சார்ந்தவர் கைது ஒருவர் செய்யப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகின்றது. மேலும், அங்கிருந்து ஒரு இறந்த சேவல் மற்றும் சேவல் காலில் கட்டப்படும் கத்திகள் மற்றும் 10 இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பசுபதிபாளையம் பறிமுதல் செய்து, அவைகளை வேனில் எடுத்து காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த குடோன் திமுக கரூர் மத்திய கிழக்கு நகர செயலாளர் கோல்ட் ஸ்பாட் ராஜா, திமுக கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் தம்பி சுதாகர் ஆகிய இருவரும் வாடகைக்கு எடுத்து நடத்தி வரும் குடோன் என்பதும் தெரிய வந்துள்ளதோடு, அரசு அனுமதியின்றி, திமுக ஆட்சியில் திமுக பிரமுகர்களே சட்டத்திற்கு புறம்பாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களிடையே முகம் சுழிப்பினை ஏற்படுத்தியுள்ளது

Views: - 324

0

0