வெற்றிக் கொண்டாட்டத்தின் போது உடல்நலக்குறைவு : அப்போலோவில் அமைச்சர் துரைமுருகன்!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2024, 3:45 pm

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார்.இதையடுத்து திமுகவினர் விக்கிரவாண்டியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அதே போல திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவியத் தொடங்கினர். இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அப்போது அங்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதையடுத்து திமுக முக்கிய தலைவர்கள் அறிவாலயத்தில் குவிந்தனர்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் அப்போது அங்கு வந்தார். ஆனால் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சர்க்கரை அளவு குறைந்ததால் உடல் சோர்வு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?