அவருடன் நடிச்சாதா எனக்கு மவுசு.. அந்த நடிகர புக் பண்ணுங்க : ஒரு படத்தில் பிரபலமானதும் முரண்டு பிடிக்கும் நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2022, 4:39 pm

மலையாள திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் அந்த நடிகை முதன்முறையாக தமிழில் பிரபல நடிகருடன் நடித்தார்.

படம் வெளியாகி பயங்கர ஹிட் ஆனது. தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் நடந்த சம்பவத்தை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்ட அந்த படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது.

குறிப்பாக படத்தின் இயக்குநருக்கு இது ரெண்டாவது படம் என்பதாலும், வழக்கமான இசையமைப்பாளர் என்பதாலும் இந்த கூட்டணி மறுபடியும் வெற்றிபெற்றது.

இதனால் நடிகைக்கு நல்ல அடையாளமாக இந்த படம் திகழ்ந்தது. இதன் காரணமாக அவருக்க தமிழில் வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது. தற்போது இவர் அண்ணன் தம்பி நடிகரான பிரபலம் நடிக்க உள்ள புதிய படத்தில் இணைந்துள்ளார்.

அந்த படத்தில் அந்த நடிகர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது நடிகையிடம் கதை சொல்ல வரும் பல இயக்குனர்களிடம் தனது முதல் ஹீரோவுடன் நடிக்க வையுங்கள் என அன்பு கட்டளையிட்டு வருகிறாராம்.

அவருடன் நடித்ததால் தான் தமிழில் எனக்கு இவ்வளவு வளர்ச்சி என பெருமை பேசும் அவர், அந்த ஒல்லிக்குச்சி நடிகரின் தற்போதைய நிலைபற்றி தெரியாமல் பேசுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?