அடுத்த 24 மணிநேரத்தில்… வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை ; 5வது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட 5 ஆயிரம் விசைப்படகுகள்..!!

Author: Babu Lakshmanan
3 January 2024, 9:12 am
Quick Share

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என்பதால் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, வானிலை ஆய்வு மையத்திலிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் செய்தியில், 02.01.2024 முதல் 05.01.2024 வரை உள்ள தேதிகளில் குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40-45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் சூழல் காற்று வீசக்கூடும் என்பதாலும், மேலும், தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் தங்களின் படகுகளை உயரமான மற்றும் பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைப்பதுடன், தங்களின். மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பாக வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் தருவைக்குளத்தைச் சேர்ந்த சேர்ந்த விசைப்படகுகள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் எனவும், இப்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் விசைப்படகு மீனவர்கள் அருகிலுள்ள துறைமுகத்திற்கு கரை திரும்புமாறும் தூத்துக்குடி உதவி இயக்குநர் விஜயராகவன் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 30ந் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள சுமார் 450 விசைப்படகுகள், 5 ஆயிரம் நாட்டு படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Views: - 843

0

0