மனித உரிமை மீறல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க உடனடி நடவடிக்கை : கோவையில் தொடங்கிய முகாம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2022, 2:13 pm
Cbe Human Rights - Updatenews360
Quick Share

கோவை : கோவை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வருகிறது.

கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில், கோவை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

இதில், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது, அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரின் அத்துமீறல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்கள் நேரில் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த முகாமில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட கோவை மண்டலத்திற்குட்பட்ட பல்வேறு நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்புடைய போலீசார், அரசு அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 285

0

0