2014ல் கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றியதே பாஜகதான் : தேனியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2024, 4:56 pm

2014ல் கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றியதே பாஜகதான் : தேனியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனி நகரில் பங்களாமேடு பகுதியில் திருந்த வேனில் நின்றபடியே தேர்தல் பரப்புரை செய்தார் அப்போது பேசிய அவர்

வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உதய சூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும்

தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றால் மாதம் இரண்டு நாட்கள் தேனி தொகுதிக்கு நான் வந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் கடந்தமுறை தேனியில் மட்டும் தோல்வி அடைந்தோம் அதற்கு ஈடு செய்யும் விதமாக தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேனி தொகுதி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்

எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் நாம் வெற்றிபெற வேண்டும்

தமிழ்நாட்டில் நீட் தேர்வை நாம் நுழைய விடவில்லை ஜெயலலிதாவும் நீட் தேர்வை நுழைய விடவில்லை

ஆனால் அதன் பிறகு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கூட்டம் நீட் தேர்வை நுழைய விட்டது ஒன்றிய பாஜக அரசுடன் சேர்ந்து அடிமை கூட்டம் நீட் தேர்வை நுழைய விட்டதால் 21 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்

சி ஏ ஜி அறிக்கையில் ஒன்பது வருடத்தில் ஏழரை லட்சம் கோடி எங்கு போனது என தெரியவில்லை

சாலை போடுவதில் முறைகேடு மருத்துவ காப்பீடு திட்டத்தில் முறைகேடு செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு

செய்வதை சொல்வோம் சொல்வதை செய்வோம் கலைஞர் வழியில் வந்தவர்கள் நாம்

கேஸ் சிலிண்டர் விலை 450 ரூபாயில் இருந்து உயர்ந்து 1100 ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது

தற்போது நமது தேர்தல் வாக்குறுதிபடி
ஒரு கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு கொடுக்கப்படும்

ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கு கொடுக்கப்படும் டீசல் 65 ரூபாய்க்கு கொடுக்கப்படும்

சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்தும் அகற்றப்படும்

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுக் கிற்கு லண்டனில் சிலை தமிழக அரசு சார்பாக அமைக்கப்பட்டுள்ளது

போடியில் 100 கோடி செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது

ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு பகுதியில் 250 கிராம கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 162 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது

முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

வாழை திராட்சை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும்

திண்டுக்கல் சபரிமலை ரயில் பாதை அமைக்கப்படும்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச்செய்ய வேண்டும்

வருகின்ற ஜூன் மூணு கலைஞரின் நூறாவது பிறந்தநாள்

அதற்கடுத்த நாலாம் தேதி வாக்கு எண்ணிக்கை

கலைஞருக்கு பிறந்தநாள் பரிசாக 40க்கு 40 தொகுதிகளும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்

உங்களது வீட்டுப் பிள்ளையாக இருந்து கேட்கிறேன்

திமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள்

தங்க தமிழ்ச்செல்வனை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள்
சிறப்பான வரவேற்புக்கு நன்றி என்று பேசினார்

இப்பிரச்சார கூட்டத்தில் ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!