2026ல் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு… போஸ்டர் ஒட்டிய விசிக : கோவையில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2024, 11:17 am

கோவை அவிநாசி சாலை தண்டு மாரியம்மன் கோயில் எதிரில் ஒட்டப்பட்டு உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டர்களால் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கோவை ரமேஷ் என்ற முகநூல் பக்கத்திலும், எழுச்சித் தமிழன் முதல் முதலில் அரசுப் பணியில் சேர்ந்தது.

கோவையில் தான் அரசியல் பயணத்தை தொடங்குவதற்காக அடிக்கல் வைத்த பின்பு மதுரைக்கு மாற்றலாகி சென்று டி.பி.ஐ என்ற இயக்கத்தை வழி நடத்தி தலித் தலைவர் மலைச்சாமி அவர்களுடன் கைகோர்த்து அவருக்குப் பின் அதனை வழி நடத்தி பின்பு அரசியல் கட்சியாய் தேர்தல் அரசியலை புறக்கணித்து விடுதலை சிறுத்தை இயக்கத்தை தொடங்கினார்.

மேலும் படிக்க: விடுதியில் உள்ள சிறுமியை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்.. போட்டோஷூட் பெயரில் ஆசிரமத்தில் அக்கிரமம்!

அந்த வகையில் எனது அருமை நண்பர்கள் கோவையில் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற புதிய அத்தியாயத்தை முதன் முதலில் கோவையில் தொடங்கி உள்ளார்கள்.

அவர்களுக்கு கொங்கு சம்பத் மற்றும் அனைத்து விடுதலை சிறுத்தை நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என்றும் சென்னையில் இருந்து கோவை சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்ணின் மைந்தன், ஒயிட்ஹவுஸ் ந.செல்லத்துரை மத்திய சென்னை நாடாளுமன்ற மேலிட பொறுப்பாளர், எழுச்சித் தமிழர் முதன் முதலில் கோவையில் காலடி வைத்த மண்ணில் இது போன்ற புரட்சி முதலில் தோன்றி இருக்கின்றது உங்களுக்கு வாழ்த்துக்கள் என்ற பதிவும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!