சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி: விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு..!!

18 April 2021, 2:09 pm
hotel parcel - updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை போல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தகவல் வெளியானது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில் நடிகர் விவேக் இறப்பிற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். மேலும், தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

Views: - 20

0

0