கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்.. ஆப் மூலம் ஆப்பு; எல்லாமே ஃப்ராடாம்.. பாதிக்கப்பட்டவர்கள் புகார்..!

Author: Vignesh
3 July 2024, 4:20 pm

தனியார் செயலி மூலம் பணத்தை முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஜிஎம்ஆர் (GMR) எனும் செயலியில் தினமும் 10 நிமிடம் வேலை செய்தால் வாரம்தோறும் சம்பளம் வரும் எனவும் அதற்கு முதலீடு செய்ய வேண்டுமென கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த முபசீரா என்ற பெண் விளம்பரப்படுத்தியுள்ளார். இதனை நம்பி பலரும் 15 ஆயிரம் முதல் 3 அரை லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

CBE

அதில், வாரம் தோறும் தொகைக்கு தகுந்தார் போல் பணம் முதலீடு செய்தர்களின் வங்கி கணக்கிற்கு பணம் வருவதாக கூறியுள்ளனர். இதனை அறிந்த மக்கள் பலரும் இந்த செயலில் முதலீடு செய்து வேலை பார்த்து வந்துள்ளனர். ஆனால், கடைசி வரை எந்த சம்பளமும் வராததை அறிந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதனை அடுத்து ஏமாற்றம் அடைந்த கோவையை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர்.

இதில், பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், இந்த ஜி.எம்.ஆர் ஆப் மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!