50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…காயங்களுடன் உயிர் தப்பிய பயணிகள்..!!

27 October 2020, 6:00 pm
car acc - updatenews360
Quick Share

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வந்த கார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

புதுச்சேரியை சேர்ந்த லாரன்ஸ், தண்டபாணி, அழகன், விஜயகுமார், சுஜி ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். காரை சுஜி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், வட்டக்கானல் பகுதியில் கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் பெரிய மரத்தில் சிக்கியதால், மேலும் பள்ளத்திற்கு செல்லாமல் தடுக்கப்பட்டது. காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து கொடைக்கானல் போலீசார், பொதுமக்களுடன் சேர்ந்து காரில் சிக்கியவர்களை மீட்டனர். படுகாயமடைந்த பயணிகள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 13

0

0