கொடைக்கானலில் பட்டாணி விளைச்சலும் குறைவு, விலையும் குறைவு : கால நிலை மாற்றத்தால் கவலை!!

22 January 2021, 12:10 pm
Peas - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் பட்டாணி விளைச்சல் குறைந்தும் விலையும் குறைந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை கீழ்மலை கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பட்டாணி உள்ளிட்டவை அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கு சீசனுக்கு ஏற்ப காய்கறிகள் விவசாயம் செய்து அறுவடை செய்வது வழக்கம். தொடர்ந்து டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் உறை பனி சீசன் துவங்கும். அனால் இந்த ஆண்டு காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் கொடைக்கானல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் மழையானது தொடர்ந்து பெய்து வந்தது.

பட்டாணி விவசாயம் டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் விவசாயம் செய்வர். மழையால் பயிரிடப்பட்ட பட்டாணி அனைத்தும் சேதமடைந்துள்ளது. மழையால் பட்டாணி விளைச்சல் குறைந்து காணப்படுகிறது. இதனால் சந்தைக்கு பட்டாணி விற்பனைக்கு வாங்க வரும் வியாபாரிகளும் விலை குறைத்தே வாங்கி செல்கின்றனர். விலையும் குறைந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Views: - 0

0

0