திமுக தலைமையை அதிர வைத்த இன்பநிதி பாசறை…. வைரலான போஸ்டர் : அறிவாலயம் எடுத்த ஆக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2023, 12:45 pm

திமுக தலைமையை அதிர வைத்த இன்பநிதி பாசறை…. வைரலான போஸ்டர் : அறிவாலயம் எடுத்த ஆக்ஷன்!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரனும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகனுமான இன்பநிதி பெயரில் ‘இன்பநிதி பாசறை’ எனும் ஒரு அமைப்பை உருவாக்கி அதன் பெயரில் செப்டம்பர் 24 ஆம் தேதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக போஸ்டர் ஒட்டி திமுக தலைமையை அதிர வைத்து விட்டனர்.

ஏற்கனவே திமுக மீது வாரிசு அரசியல் எனும் விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மகனும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் மீதும், அவர் மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் வாரிசு அரசியல் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஆனாலும், இருவருமே, கட்சியில் படிப்படியாக வேலை செய்து பதவிகள் வழங்கப்பட்டு எம்எல்ஏ, அமைச்சர் என முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சமயத்தில் இன்பநிதி பாசறை என புதுக்கோட்டை திமுகவினர் அடித்த போஸ்டரால் மீண்டும் வாரிசு அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. இன்பநிதிக்கு பாசறை அமைத்த திமுக நிர்வாகிகளான புதுக்கோட்டையை சேர்ந்த மணிமாறன், திருமுருகன் ஆகிய இருவரும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!