கொரோனா காலத்தில் பணி செய்ததற்காக ஊக்கத்தொகை வழங்க வேண்டும் : தூய்மை பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan27 October 2021, 4:37 pm
கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்கும் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்கம் பணியாளர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்துடன் ரூபாய் 1400 கூடுதலாக வழங்க வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் பணி செய்தமைக்காக ஊக்கத்தொகை ரூ.15,000 வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.
மேலும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகள் நிறைவேறாத காரணத்தால் தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.
1
0