பிரபல மாலில் வருமான வரித்துறையினர் ரெய்டு… அடுத்தடுத்து ஜவுளிக்கடைகளிலும் சோதனை : வெடவெடத்துப் போன விழுப்புரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2022, 4:48 pm
Plaza IT Raid - Updatenews360
Quick Share

விழுப்புரத்தில் மகாலட்சுமி பிளாசாவில் இயங்கி வரும் கலர்ஸ் உள்ளிட்ட இரண்டு துணிக்கடையில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள எம்.எல்.எஸ் என்று அழைக்கப்படும் மகாலட்சுமி குழுமத்தின் உள்ள கிரின்ஸ் வணிக வளாகம், திரையரங்கு, மளிகை கடை, மகாலட்சுமி துணிக்கடை, மற்றும் கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் பத்துக்கு மேற்பட்டோர் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 11 மணி அளவில் தொடங்கிய சோதனை தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிரீன்ஸ் வணிக வளாகம் நுழைவாயிலில் பூட்டப்பட்டுள்ளன முழுமையாக வணிக வளாகம் மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.

இதனால் அது வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளனர். இதே போல விழுப்புரத்தில் மற்றொரு பிரபல ஜவுளிக்கடையான கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்ஸில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Views: - 154

0

0