3வது நாளாக நீடிக்கும் வருமான வரித்துறை ரெய்டு.. வரி ஏய்ப்பு புகாரால் கோவையில் ஐடி அதிகாரிகள் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2024, 9:58 am

3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை ரெய்டு.. வரி ஏய்ப்பு புகாரால் கோவையில் ஐடி அதிகாரிகள் அதிரடி!!

ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். அதன்படி, தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்பாக சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில், சென்னை அமைந்தகரையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம், ஈரோடு கருப்பன் வீதியில் உள்ள சிஎம்கே கட்டுமான நிறுவனம், அலுவலகம், அந்நிறுவன அதிபர்கள் குழந்தைசாமி, அவரது மகன்கள் பாலசுப்பிரமணி, வெங்கடாச்சலம் ஆகியோரின் வீடுகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதுபோன்று, நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வந்தது. அதுமட்டுமில்லாமல், கோவையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வீடுகள், அலுவலகங்கள் என அவர்கள் தொடர்புடைய இடங்களில் 2 நாட்களாக சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோவையில் கட்டுமான நிறுவனம் தொடர்பாக 3வது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்கிறது என கூறப்படுகிறது. கட்டுமான தொழில், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த இரு தினங்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், 3-வது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!