செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு…!!

26 November 2020, 6:30 am
chembarapakkam - updatenews360
Quick Share

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு, 7 ஆயிரம் கனஅடியிலிருந்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகிய நிவர் புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து 22 அடியாக உயர்ந்தது. பாதுகாப்பு கருதி முதலில் விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

இதையடுத்து தொடர்ந்து 5000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு மேலும் 9000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு நீர் திறப்பு 7000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இன்று காலை முதல் செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்வதால் நீர் வரத்து 8,850 கனஅடியாக அதிகரித்தது.

இதையடுத்து இன்று காலை முதல் மீண்டும் நீர்திறப்பு 9,300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0