ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
27 June 2021, 9:00 am
chennai metro - updatenews360
Quick Share

சென்னை: கொரோனா ஊரடங்கால் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் குறைந்த அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் குறைந்த அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் 98 மின்சார ரயில் சேவைகளே இயக்கப்பட்டன.

Metro - Updatenews360


இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் சென்னையில் மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு, பொதுமக்களும் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்தது. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை மின்சார ரெயில் சேவையும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னையில் இன்று மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையே 149 மின்சார ரயில் சேவையும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே 66 மின்சார ரயில் சேவையும், கடற்கரை-செங்கல்பட்டு இடையே 138 மின்சார ரயில் சேவையும், கடற்கரை-வேளச்சேரி இடையே 50 சேவைகளும், ஆவடி, பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே 16 சேவைகளும் என 419 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 159

0

0