வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பீதியில் பொதுமக்கள்….கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை..!!

9 July 2021, 12:10 pm
Quick Share

கோவை: வால்பாறையில் கூட்டமாக உலாவரும் சிறுத்தைகளால் பொதுமக்கள் பீதியடைந்த நிலையில் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்

கோவை மாவட்டம் வால்பாறையில் தற்போது சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வால்பாறையில் உள்ள காமராஜர் நகர், சிறுவர் பூங்கா,வாழைத்தோட்டம், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் குடியிருப்புப்பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் சிறுத்தை புகுந்து அப்பகுதியில் உள்ள வளர்ப்பு பிராணிகளை பிடித்து செல்வதும் வாடிக்கையாகி விட்டது.

அதேபோல வால்பாறையிலுள்ள குமரன் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்புறம் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் மூன்று சிறுத்தைகள் உலாவந்தது அப்பகுதியிலுள்ள குமரன் டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளகாட்சி சமூக வலை தளங்களில் மூலம் பரவிவருவதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள டாக்டர் மஜீன்தார் என்பவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் நான்கு குட்டிகளை போட்டிருந்த நிலையில் மாடியிலிருந்த அந்த நாயை சிறுத்தை பிடித்து சென்றுள்ளது. எனவே இனிமேலும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி நடமாடிவரும் சிறுத்தைகளை கூண்டு வைத்து சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Views: - 129

0

0