மதுரையில் வாக்குச்சாவடி மையங்கள் அதிகரிப்பு : வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு!!

27 February 2021, 1:53 pm
Madurai Vote -Updatenews360
Quick Share

மதுரை : வாக்களிக்கும் முறை குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு பதிவுக்கு பயன்படுத்துவதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி முன்னிலையில் சீலிட்ட அறை திறக்கப்பட்டு 192 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டும் வெளியே எடுக்கப்பட்டன.

விவி பேட், இ.வி.எம் இயந்திரங்கள் உள்ளிட்டவை அடங்கிய பெட்டிகள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு அங்குள்ள வாக்குச்சாவடி மையங்களில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இதன் மூலம், வாக்களிப்பது எப்படி என்று வாக்காளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கடந்த 2016 தேர்தலில் மதுரை மாவட்டத்தில் மொத்தம் 2716 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட நிலையில், இந்த தேர்தலில் அவை 3856 மையங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது, இந்த பணிகளின் போது அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர்

Views: - 11

0

0