மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை: ஆழியார் அணையின் நீர்மட்டம் உயர்வு….கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

Author: Rajesh
6 August 2021, 10:47 am
Quick Share

கோவை: பொள்ளாச்சி ஆழியார் பகுதிகளில் தொடர் கனமழையால் ஆழியார் அணையின் கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியார் அணை 120அடி கொள்ளளவு கொண்டதாகும்.

தற்போது அணையின் நீர்மட்டம் 110.30கன அடி உயர்ந்து உள்ளது. அணைக்கு நீர்வரத்து 891 கன அடியாகும், 199கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து, அணையிலிருந்து நீர் அதிகமாக வெளியேற்றப்படுவதால் ஆழியார் அணை கரையோர உள்ள பொது மக்களுக்கு தண்டோரா போட்டு பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

Views: - 678

0

0