தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளின் நேரம் அதிகரிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
Author: kavin kumar29 October 2021, 8:46 pm
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை ரேசன் கடைகளின் வேலை நேரம் இரவு 7 மணி வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 01-ஆம் தேதி முதல் 03-ஆம் தேதி வரை காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நியாயவிலைக் கடைகளை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசு உத்திரவிட்டுள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகப் பொருட்களை வாங்க விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகள் அனைத்தும் நவம்பர் 1, 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்க இயலாதவர்கள் வழக்கம் போல் பண்டிகை முடிந்த பிறகு நவம்பர் 7-ஆம் தேதி முதல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0
0