காவல்துறையின் கம்பீரம் : பெருமிதம் கொள்ளும் காக்கிகள்..!

30 June 2020, 7:46 pm
Quick Share

காவலர்கள் உடைய பணி மகத்தானது என்பது மட்டும் மறுக்க முடியாத விஷயம். எல்லாத்துறையிலும் இருக்கிற விஷமிகள் காவல்துறையிலும் இருக்கலாம். அந்த விஷமிகளால் காவல்துறையின் உடைய மிகப்பெரிய மாண்புகளை கேள்விக்குறியாகி விட்டது சரியான விசயம் அல்ல. காவல்துறை அதிகாரியே தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய அளவுக்கு விஷமிகள் உடைய செயல் அமைந்துவிட்டது.

கொரோனாவின் துவக்க காலத்தில் களத்தில் நிற்கும் போர் வீரனைபோல சித்தரிக்கப்பட்ட காவல்துறை, இதோ மிகவும் பலவீனமான துறையை போல இன்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால், ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டைக் காக்கும் எல்லையில் இருக்கிற வீரனுக்கு எல்லையில் யாரும் ஊடுருவாமல் பாதுகாப்பு பணி.

அந்த ஒற்றைப் பணியை செய்தால் போதும். அதற்கே அவ்வளவு அர்பணிப்பு தேவை.

ஆனால், காவல்துறையினர் பன்முகத் தாக்குதலிலிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம். சகல குற்றச்செயல்களில் இருந்து சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை உணர்வோடு இருக்கிறார்கள். கொள்ளையர்கள், கொலைகாரர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள், திருடர்கள், பிக்பாக்கெட்காரர்கள் என சமூகத்தில் உலகம் பல்வேறு குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உண்டு.

கண்காணித்து அவர்கள் அத்துமீறும்போது சிறைக்கு அனுப்புவது, மற்ற நேரங்களில் இயல்பு வாழ்க்கை அவர்கள் வாழ அனுமதிப்பது போன்ற பணிகளை ஒரே நேரத்தில் காவல்துறையினர் செய்கின்றனர். அணியும் ஆடையில் காவல்துறையின் கம்பீரம் தெரியும். பார்க்கும் பார்வையில் சந்தேகத்தின் சாயல் விரியும்.

காவல்துறைக்கு குடும்பம் என்பது பெயருக்குத்தான். பணி நேரம் என்பது மற்றவர்களைப் போல குறிப்பிட்ட நேரமாக இருக்காமல், 24 மணி நேரமும் சமூகத்துக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டிய கட்டாயம் காவல் துறைக்கு நிச்சயம் உண்டு. அதே காவல்துறையை கண்டித்து போடக்கூடிய பொதுக்கூட்டம் ஆனாலும் பொறுமையோடு, நின்று காவல் காக்கின்ற திடமான மனநிலை காவல்துறைக்கு மட்டுமே உண்டு.

Coronavirus_india_ police -updatenews360

மற்ற துறையினர் செய்கிற தவறுகள் காவல்துறையின் மீது பதிகிற அபாயங்கள் அதிக அளவில் உள்ளன. ஒரு பேருந்தில் வாழ்வாதாரத்துக்காக போராட வேண்டிய வணிகனும், சட்டத்தையும் காக்கின்ற காவலனும் விதிகளை கடைபிடிப்பதில் விதிமீறல் நடக்கும்போது சட்டத்தை அமல்படுத்த வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு. சட்ட விதியை மீறியது பெரிய மனிதராக இருந்தாலும் சரி, சிறிய நபர்களாக இருந்தாலும் சரி..!

அவர்களுடைய தவறை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்த வேண்டிய பொறுப்பு
காவல்துறைக்கு உள்ளது. எளிதாக காவல்துறையை விமர்சிப்பது சுலபம். அதற்கு ஏற்றார்போல காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள், தங்களின் நானென்ற எண்ணத்தில் செயல்படுவதால், கசப்பை அதிகப்படுத்தி கசாப்புக் கடைக்காரனை போல செயல்படுவதால், காவல்துறை மீது கசப்பான அனுபவங்கள் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றன. அதற்கு உதாரணம்தான், சாத்தான்குளம் சம்பவம்..!

என்ன செய்வது ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய போலீசார் தான், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவெங்கும் தலைவர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, தங்களுடைய பெருமையுடைய விளைவை காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

Corona police 1- updatenews360

அதுவும் கொரோனா சமூகத்திற்குள் பரவியுள்ள இந்த சூழ்நிலையில், அந்த நோய் பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் காவல்துறையை சேர்கிறது.

இருபத்தி நான்கு மணி நேரப்பணிகள் அவர்களைசோர் வடைய செய்வது நிஜம். அந்த சோர்வை புரிந்துகொண்டு அவர்கள் கடமையை செய்ய மக்கள் அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் சமுக விரோதிகளுக்கு பலியாக வேண்டிய சூழல் ஏற்படும்.

Leave a Reply