AUS VS IND 4-வது டெஸ்ட் மேட்சில் ஏற்பட்ட பல வித சர்ச்சைகள்…இந்தியாவின் படுதோல்விக்கு இது தான் காரணமா..!

Author: Selvan
30 December 2024, 8:42 pm

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்டின் முக்கிய நிகழ்வுகள்

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற்ற “பாக்ஸிங் டே டெஸ்ட்” மேட்சில் முதல் நாள் இருந்து இறுதி நாளான இன்று வரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது.

இந்தியாவின் தோல்விக்கு ஒரு வகையில் மோசமான பேட்டிங் காரணமாக இருந்தாலும் மறுபுறம் வீரர்களுக்கு இடையே நடந்த சில சில மோதல் மற்றும் ஆக்ரோஷமான வார்த்தைகளும் இந்திய வீரர்களின் மனநிலையை பாதித்திருக்கும் என்று கூறப்படுகிறது.

"Virat Kohli vs Sam konstas clash"

அந்த வகையில் முதல் நாள் ஆட்டத்தின் போது விராட்கோலி ஆஸ்திரேலியா இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் தோள்பட்டையை இடித்து,இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனை கண்டித்து ஆஸ்திரேலியா ஊடகம் கோலியை ஜோக்கர் கோலி என்று கிண்டல் அடித்து கடுமையாக விமர்சித்தது.

மேலும் சாம் கான்ஸ்டாஸ் பும்ரா பந்தை 2 வது இன்னிங்சிலும் அடித்து நொறுக்குவேன் என்று சவால் விட்டார்.அதன்பின்பு இந்திய அணி பேட்டிங் ஆட வந்த போது கேல் ராகுலை நாதன் லயன் “நீ என்ன பா தப்பு பண்ண இப்போ வந்து இருக்க” என கிண்டல் அடிப்பார்.அதற்கு கே எல் ராகுல் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக ஆட்டத்திற்கு ரெடி ஆவார்.

இதையும் படியுங்க: மீண்டும் சொதப்பிய ரோஹித்,கோலி…படு தோல்வியில் இந்திய அணி..WTC FINALS கேள்வி குறி..!

அதே சமயம் இந்திய அணி பேட்டிங் ஆடி கொண்டிருக்கும் போது மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் கரகோஷம் எழுப்புங்க என கைகளை மேலே தூக்கி தூக்கி சாம் கான்ஸ்டாஸ் தொடர்ச்சியாக பண்ணிக்கொண்டே இருப்பார்.அப்போது மூன்றாவது நாள் ஆட்டத்தில் விராட்கோலி அவுட் ஆகி பெவிலியன் திரும்பி செல்லும் போது ஆஸ்திரேலியா ரசிகர்கள் வரம்பு மீறிய வார்த்தைகளை சொல்லி கோலியை கிண்டல் செய்வார்கள்,இதனை கேட்டு கோலி அவர்களை பார்த்து முறைத்து கொண்டே செல்வார்.

பின்பு இரண்டாவது இன்னிங்சின் போது சாம் கான்ஸ்டாஸ் பும்ரா வீசிய அபார பந்தில் போல்ட் ஆகி அவுட் ஆவார்.இதனால் பும்ரா ரசிகர்களை பார்த்து கையே மேலே மேலே தூக்குவார்.அதன்பிறகு விழுந்த ஒவ்வொரு விக்கெட்களையும் இந்திய வீரர்கள் ஆக்ரோசமாக கொண்டினார்கள்.

"Boxing Day Test 2024 controversies"

மேலும் இறுதி நாள் ஆட்டத்தின் போது டிராவிஸ் ஹெட் வீசிய பந்தில் ரிஷப் பந்த் அவுட் ஆவார்.இதனை பௌலிங் போட்ட ஹெட் ஆபாச செய்கை செய்து கொண்டாடினார் என சர்ச்சை வெடித்தது.பின்பு நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வாலை அருகில் பீல்டிங் பண்ணிக்கொண்டிருந்த சாம் கான்ஸ்டாஸ் எரிச்சலூட்டும் விதமாக வார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருப்பார்.இதனால் கோவம் அடைந்து ஜெய்ஸ்வால் உங்க வேலை எதுவோ அத பாருங்க என சொல்லி,பின்பு நடுவரிடம் புகார் செய்வார்.

அதன் பின்பு பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஜெய்ஸ்வால் அடிக்க முயற்சி செய்து,பந்து கீப்பரிடம் செல்லும்,அப்போது ஆஸ்திரேலியா வீரர்கள் அவுட் கேட்க,களத்தில் இருந்த நடுவர் நாட் அவுட் கொடுப்பார்.இதனால் DRS எடுத்தார் பேட் கம்மின்ஸ்.

"DRS controversy Boxing Day Test"

அப்போது மூன்றாம் நடுவர் பந்தை ட்ராக் செய்யும் போது பந்து அவரது கையுறையில் பட்டு திசை மாறி செல்வதை கவனித்தார்.ஆனால் ஸ்னிக்கோ-வில் எதுவுமே காட்டவில்லை இருந்தாலும் நடுவர் அவுட் முடிவை கொடுத்தார்.இதனால் ஜெய்ஸ்வால் கள நடுவருடன் சிறிது முறையிட்டு பின்பு நடையே கட்டினார்.

இப்படி பல வித சர்ச்சைகளில் இந்திய அணி விளையாண்ட காரணத்தால் தோல்வியை சந்தித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

  • retro movie second day collection is low எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?