பேட்டிங்கில் அதிரடி…பௌலிங்கில் சரவெடி…பொட்டலம் ஆன இங்கிலாந்து அணி.!

Author: Selvan
12 February 2025, 9:57 pm

ஒயிட் வாஷ் ஆன இங்கிலாந்து அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இதையும் படியுங்க: IND vs ENG: கிரிக்கெட் மூலம் ஹிந்தி திணிப்பு…திட்டமிட்ட சதியா…கடுப்பான தமிழக ரசிகர்கள்.!

ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் வென்று,இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில்,மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வின் பண்ண இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்தது,அதன் படி இந்திய அணி பேட்ஸ்மன்களின் அதிரடி ஆட்டத்தால் 356 ரன்களை குவித்தது,கில் அபாரமாக ஆடி 112 ரன்களை குவித்தார்,விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்தார்கள்,அடுத்ததாக 357 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து வீரர்கள்,இந்திய அணியின் பௌலிங்கில் சிக்கி சின்னா பின்னம் ஆகினார்கள்.

இதனால் 34.2 ஓவர்களில் 214 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி,தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதம் அடித்த கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!