ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எண்ணெய் வாங்காது.. நல்ல செய்தி.. டிரம்ப் சொன்னதை கவனிச்சீங்களா!
Author: Udayachandran RadhaKrishnan2 August 2025, 11:41 am
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த முடிவு, இந்தியா ரஷியாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை பெருமளவில் இறக்குமதி செய்வதால் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், “இந்தியா இனி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப்போவதில்லை என்று கேள்விப்பட்டேன். அப்படி நடந்தால், அது உண்மையில் ஒரு நல்ல நடவடிக்கையாக இருக்கும்,” என்று கூறினார்.

இந்த அறிவிப்பு இந்திய-அமெரிக்க வர்த்தக உறவுகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதால், இதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
