முகமது ஷமி செய்தது பாவமா… வெடித்தது புது சர்ச்சை.!

Author: Selvan
7 March 2025, 7:04 pm

ஷமிக்கு குவியும் ஆதரவு

முகமது ஷமி அண்மையில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய போது,அவர் எனர்ஜி டிரிங்க்ஸ் குடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதையும் படியுங்க: அட்டு படம்…நான் நடிச்சு இருக்கவே கூடாது…வன்மத்தை கக்கிய தமன்னா.!

இதை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி,ஷமி நோன்பு கடைப்பிடிக்கவில்லை,இது ஒரு குற்றம் என்று விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மௌலானாவின் கருத்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில்,இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பும் எழுந்துள்ளது.குறிப்பாக,ஷியா மதகுரு மௌலானா யசூப் அப்பாஸ், ஏதாவது கட்டாயமாக இருந்தால்,மதம் இருக்காது,ஒருவரின் தனிப்பட்ட முடிவை விமர்சிப்பது தவறு என்று கூறினார்.

அதேபோல்,அகில இந்திய தனிநபர் சட்ட வாரியத்தின் மௌலானா காலித் ரஷீத்,”ஏதாவது மருத்துவ காரணத்தாலோ அல்லது பயணத்தில் இருப்பதாலோ நோன்பு விலக்கப்படலாம்,ஷமி சுற்றுப்பயணத்தில் இருந்ததால்,இது அவருடைய விருப்பம்” என்று விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மிகுந்த விவாத பொருளாக மாறியுள்ளது.கிரிக்கெட் வீரராக தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஷமி முடிவு செய்திருப்பதாகவும்,இது அவருடைய தனிப்பட்ட உரிமை என பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!