ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!
Author: Udayachandran RadhaKrishnan2 May 2025, 3:59 pm
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே.
இதையும் படியுங்க: என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!
இந்த புதிய விதிமுறைகள் நேற்ற மே1 முதல் அமலுக்கும் வந்துள்ளது. முக்கியமாக மூன்று மாற்றங்களை செய்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு..
- இதுவரை 120 நாட்களுக்கு முன்பாக ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருந்தது. ஆனால் இனி 60 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
- இதுவரை வெயிட்டிங் டிக்கெட் வைத்திருப்பகள் முன்பதிவு செய்யப்பட்ட 2ஆம் வகுப்பு படுக்கை அல்லது ஏசி படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்திருப்போம். ஆனால் இனி வெயிட்டிங் டிக்கெட் வைத்திருப்போர் unreserved பெட்டிகளில் மட்டுமே பயணிக்க வேண்டும். மீறினால் அபராதம் வசூலிக்கப்படும்.
- ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக் செய்து வெயிட்டிங் என வந்தால் அது தானாகவே ரத்தாகிவிடும். அதற்காக நாம் செலுத்திய டிக்கெட் கட்டணத்தை நாம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
- மொபைல் அல்லது இணையம் மூலமாக ரயிலில் டிக்கெட் பதிவு செய்பவர்கள் OTPஐ பயன்படுத்தியே புக் செய்ய முடியும். ஒரே IDல் பல டிக்கெட்டுகளை புக் செய்வதை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்.
- தட்கலில் டிக்கெட் புக் செய்பவர் தனது ஐடி மூலம் நாளொன்றுக்கு 2 டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஏசி வகுப்புகளுக்கு தட்கலில் புக் செய்ய வேண்டுமென்றால், காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகுப்புகளுக்கு காலை 11 மணி முதல் மட்டுமே புக் செய்ய முடியும்.
- ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்தால், 75% பணம் திரும்ப கிடைக்கும். 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கேன்சல் செய்தால், 50% டிக்கெட் பணம் கிடைக்கும்
- 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் எந்த தொகையும் திரும்ப கிடைக்காது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.