பிறப்புறுப்பில் 2 கிலோ கட்டி.. சாலையில் சுற்றித்திரிந்த நபருக்கு நேர்ந்தது என்ன?

Author: Hariharasudhan
16 October 2024, 12:38 pm

மதுரையில் பிறப்புறுப்பில் 2 கிலோக்கும் அதிகமான எடையுடன் சுற்றித் திரிந்த நபரை ரெட் கிராஸ் அமைப்பினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மதுரை: மிகுந்த போக்குவரத்து நெரிசல் உடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் சாலையில் பிறப்புறுப்பில் இரண்டு கிலோ கட்டியுடன் நடக்க முடியாமல் சுமார் 45 வயது மதிக்கதக்க நபர் சாலையில் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

பின்னர், இது குறித்த தகவல் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பினருக்கு கிடைத்துள்ளது. இதன் பேரில், அதன் செயலாளர் ராஜ்குமார் மற்றும் உறுப்பினர் அறிவழகன் ஆகியோர் நேரில் சென்று, மயங்கி விழுந்த கிடந்த அந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர், அந்த நபர் குறித்து விசாரித்துள்ளனர்.

A Man

இந்த விசாரணையில், அவர் காரைக்குடியைச் சேர்ந்த சரவணன் என்பதும், தனது குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், பிறப்புறுப்பில் ஏற்பட்ட இரண்டு கிலோவுக்கும் அதிகமான எடையுடன் கூடிய கட்டியுடன் நடக்க முடியாமல் ஒவ்வொரு ஊராக அவர் சுற்றித் திரிவதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: திமுக அரசுக்கு எதிராக ஒரு வரி கூட இல்லை.. சென்னை மழை குறித்து அண்ணாமலை கருத்து!!

மேலும், நோயின் தீவிரம் அதிகரித்ததால் தற்போது நடக்க இயலாமல் மயங்கி கீழே விழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர், ரெட் கிராஸ் அமைப்பைச் சேர்ந்த இருவரும், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு, போலீசார் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள ஆதரவற்றோர் சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர்.

தற்போது அவருக்கு அங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தகவல் கிடைத்ததும் வந்து உதவிய ரெட் கிராஸ் அமைப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!